கட்சியின் குறிக்கோள்
abtimg

மக்கள் முன்னேற்ற முன்னனி இந்திய அரசியல் சாசனத்திற்குட்பட்டு மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் மக்களுக்கு உறுதிசெய்து மக்கள் அவற்றை முழுப்பொறுப்பு, சமூக அக்கறையுடனும் பயன்படுத்தும்வகையில் தேவையான அனைத்து மட்டங்களிலும் தளங்கள் உருவாக்கும். மக்கள் நலன், மக்கள் வளம், மக்கள் முன்னேற்றம் மற்றும் மக்கள் பாதுகாப்பு அனைத்தும் மக்கள் கையில் என்ற நிலைப்பாட்டோடு தமிழகத்தின் ஒவ்வொரு தெருக்களிலும் மக்கள் பாராளுமன்றங்களை உருவாக்கி, மக்களே நேரடியாக அரசியல் அதிகாரத்தில் பங்கேற்கும் மக்கள் பங்கேற்பு தளங்கள் உருவாக்கப்படும்.

ஜாதி, மதம், இனம், மொழி மற்றும் கட்சி அரசியல் சார்பு போன்ற எத்தகைய வேறுபாடுகளும் இன்றி மக்கள் பங்கேற்பு தளங்களான மக்கள் பாராளுமன்றங்களை உருவாக்கி பெருந்தலைவர் காமராஜர் முன்னுதாரணமாக வழங்கிய அரசியல் நிர்வாகத்தில் தூய்மை, எளிமை, நேர்மை போன்ற அரசியல் பண்புகளை அடித்தளமாகக் கொண்ட அரசியல் நிர்வாகத்தை உறுதி செய்வதும், தேசத்தந்தை மகாத்மா காந்தி வரையறுத்த மக்களாட்சியையும், அண்ணல் அம்பேத்கர் நிலைபடுத்திய சமத்துவ சமதர்ம சமூகம் முழுமை பெறவும், தேசிய தலைவர் A.P.J.அப்துல்கலாம் கனவு கண்ட ஊழல் வறுமை, கல்வியின்மை போன்ற சமுகக்கேடுகள் முற்றிலும் வேரறுக்கப்பட்டு இந்தியா வல்லரசாக தேவையான அனைத்து கூறுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்படும்


Member Ship